News October 6, 2025
காலாண்டு விடுமுறை.. கடைசி நேரத்தில் பறந்த உத்தரவு

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடநூல்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை விநியோகிக்க வேண்டும். பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 6, 2025
கரூர் துயரம்: சற்றுமுன் அதிரடி கைது

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நீதிபதிகளை விமர்சித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் சம்பவ வழக்கில், TVK கட்சி மற்றும் நிர்வாகிகள் குறித்தும், விஜய்யின் தலைமை பண்பு குறித்தும் ஐகோர்ட் நீதிபதி கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில், நீதிபதிகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் விமர்சித்த முன்னணி நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கும் சசிகுமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
News October 6, 2025
நீ பெரும் கலைஞன்..

கனடாவில் நடைபெற்ற அல்பெர்டா இந்திய திரைப்பட விழா 2025-ல், முதல்முறையாக ‘Golden Beaver Award’ என்ற விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் ஒருவரின் சாதனைகளையும், பங்களிப்பையும் கெளரவிக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதை முதலில் பெற இவரை விட பெஸ்ட் சாய்ஸ் வேறொருவர் உண்டோ. பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் நடிகர் கமல்ஹாசன் இந்த விருதை பெற்றுள்ளார்.
News October 6, 2025
Recipe: கோதி அல்வா செய்வது எப்படி?

முழு கோதுமையை கழுவி, 6 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின் கிரைண்டரில் போட்டு அரைத்து, அதை பிழிந்து பாலெடுக்கவும். அதிலிருந்து கிடைக்கும் கெட்டியான பாலை எடுத்து, அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். கொதி வந்ததும், அதில் பனை வெல்லம் சேர்க்கவும். அத்துடன், சிறுக சிறுக நெய் சேர்த்து இடைவிடாது கிளறவும். பதம் வந்ததும் ஏலக்காய் தூள், முந்திரி போட்டு இறக்கி ஆறவைத்தால் கோதி அல்வா ரெடி. SHARE IT.