News October 9, 2025

TN-ல் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்: கவர்னர்

image

தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளதாக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். இருப்பினும் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மிக அவசியம் எனவும், மனிதவள திறனை மேலும் திறமையாக மாற்றினால், அது நாட்டிற்கு முழு வளர்ச்சியை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நம் நாடு, தமிழகத்தை வளர்ச்சிக்கான முக்கிய இயந்திரமாக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 9, 2025

சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள்!

image

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடன் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களை கலக்கமடைய செய்துள்ளது. சென்செக்ஸ் 82 புள்ளிகள் சரிந்து 81,691 புள்ளிகளிலும், நிஃப்டி 5 புள்ளிகள் சரிந்து 25,040 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Tata Motors, NTPC, HDFC Life, Maruti Suzuki உள்ளிட்ட நிறுவனங்களின் ஷேர்கள் சரிந்துள்ளன. அதேநேரம் TCS, Tata Steel, Reliance நிறுவனங்களின் பங்குகள் லாபம் கண்டுள்ளன.

News October 9, 2025

இருமல் சிரப்பை தொடர்ந்து இந்த மருந்தும் ஆபத்து!

image

நரம்பு வலி, கீழ் முதுகு வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணியான Tramadol, இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 6,506 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த மருந்து குறைந்த செயல்திறனை கொண்டிருப்பதோடு, இதய நோய் பிரச்னைகளை ஏற்படுத்துவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருமல் டானிக் விவகாரம் குழந்தைகளை பாதித்த நிலையில், இந்த Tramadol பெரியவர்களை குறிவைக்கிறது.

News October 9, 2025

10 பெண்களை ஏமாற்றினாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

image

மாதம்பட்டி மீதான புகாரில் ஜாய் கிரிசில்டாவின் வழக்கறிஞராக MP சுதா களமிறங்கியுள்ளார். இந்நிலையில், சுதாவுடன் சென்று மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் ஜாய். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னைப் போல 10 பெண்களை ரங்கராஜ் ஏமாற்றியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், தனக்கும் தனது குழந்தைக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு ரங்கராஜ்தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!