News June 30, 2024
மாணவர்களுக்கு தரமான சைக்கிள்கள் வழங்கப்படுகிறது

பள்ளி மாணவர்களுக்கு தரமான மிதிவண்டிகளை வழங்கி வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. தரமற்ற மிதிவண்டிகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், மிதிவண்டிகள் ஒப்பந்தப்புள்ளி சட்டப்படி வாங்கப்படுகிறது, அதன் தரம் 2 நிலைகளில் சரிபார்க்கப்படுகிறது என தமிழக அரசு அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளது. மேலும், மிதிவண்டிகள் குறித்து வெளியாகும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
Similar News
News September 20, 2025
இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஓய்வு

இந்திய ரயில்வேயில் 36 ஆண்டுகளாக ரயில்களை இயக்கி வந்த சுரேகா யாதவ் ஓய்வு பெற்றுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், 1989-ல் ரயில்வேயில் துணை ஓட்டுநராக பணியை தொடங்கினார். இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர், சரக்கு ரயில், பயணிகள் ரயில்களை இயக்கியுள்ளார். அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்ற நிலையில், வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
News September 20, 2025
அடுத்த ஆண்டு சீனா செல்லும் டிரம்ப்

இந்தியா உடன் விரோதத்தை வளர்க்கும் டிரம்ப், சீனாவுடன் நட்பை வளர்க்கிறார். கடந்த 3 மாதங்களில் முதல் முறையாக சீன அதிபர் ஜின்பிங்குடன் அவர் தொலைபேசியில் பேசியுள்ளார். பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தென் கொரியாவில் நடக்க உள்ள ஆசிய பசிபிக் வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில் சீன அதிபரை சந்திக்க உள்ளதாகவும், சீனாவிற்கு அடுத்த ஆண்டு பயணம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 20, புரட்டாசி 4 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.