News May 24, 2024
Qualifier 2 டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை

SRH-RR இடையேயான Qualifier 2 போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய நிலையில், பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்கப்படாமலே உள்ளன. கிரிக்கெட்டை கொண்டாடும் சென்னை , ஐபிஎல் ப்ளே-ஆஃப் போட்டியை காண ஆர்வம் காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு CSK அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தேர்வாகததும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
Similar News
News March 15, 2026
விருதுநகர் : சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

விருதுநகர் மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 7845252525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
News March 15, 2026
கேஸ்.. பெர்சிய பகுதியில் இந்திய போர் கப்பல்கள்

LPG வாயுவை சுமந்துவரும் ஷிவாலிக், நந்தாதேவி ஆகிய 2 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்துவிட்டன. 2 கப்பல்களுக்கு மார்ச் 21-ம் தேதி இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்திய போர் கப்பல்கள் பெர்சிய வளைகுடா அருகே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News March 15, 2026
EPS-ஐ மட்டுமே டார்கெட் செய்கிறாரா திமுகவின் OPS?

3 முறை அதிமுக CM, கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த OPS, சமீபத்தில் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து, தனது பிரசாரத்தையும் தென்மாவட்டங்களில் இருந்து தொடங்கியுள்ளார். ஆனால், அதிமுக கூட்டணியோ (அ) திமுகவின் சாதனைகளையோ அவர் பெருமளவில் குறிப்பிட்டு பேசவில்லை. அதேநேரம், அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தை முன்னிறுத்தி <<19380159>>EPS<<>>-ஐ மட்டுமே பகிரங்கமாக OPS விமர்சித்து வருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.


