News May 23, 2024
Qualifier 2 போட்டி டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ‘Qualifier 2’ போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்னும் சற்று நேரத்தில் (காலை 11 மணிக்கு) தொடங்க உள்ளது. டிக்கெட்டுகளை பேடிஎம் மற்றும் பேடிஎம் இன்சைடர் ஆப்களிலும் அல்லது insider.in. அல்லது IPLT20.COM என்ற இணையதளங்களிலும் வாங்கலாம். SRH-RR இடையேயான இப்போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
Similar News
News March 5, 2026
சற்றுமுன்: விலை கணிசமாக குறைந்தது

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ₹100-க்கு 5 கிலோ வரை வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்கும் இதே நிலைமைதான். மேலும், பீட்ரூட்(கிலோ ₹30), உருளைக் கிழங்கு (கிலோ ₹15), சுரைக்காய் (கிலோ ₹35) உள்ளிட்டவையும் விலை குறைந்துள்ளது. இதேபோல், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் காய்கறி விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உங்க ஏரியாவில் விலை எப்படி இருக்கிறது?
News March 5, 2026
பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

பட்டா, சிட்டா, FMB ஆகியவற்றை ஒன்றாக பெறும் வகையில், ஒருங்கிணைந்த நில ஆவணம் வழங்கும் சேவையை TN அரசு தொடங்கியுள்ளது. eservices.tn.gov.in இணையதளத்தில் நிலம் சார்ந்த மாவட்டம், வட்டம், கிராமம் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து ஒருங்கிணைந்த ஆவணத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும், நிலத்தின் உரிமை மாற்ற வரலாற்றை தெரிந்துகொள்ள உதவும் பட்டா மாறுதல் அறிக்கை சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. SHARE IT
News March 5, 2026
திமுக – காங்கிரஸில் இன்னும் இந்த சிக்கல் இருக்குதா?

திமுக-காங்., இடையே ஏற்பட்டிருக்கும் கூட்டணி உடன்பாடு வெறும் பேப்பரில் மட்டுமே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இவ்வளவு நாள் தவெகவுடன் காங்., திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியதே அதற்கு காரணம் என்கின்றனர். இதனால், காங்கிரஸ் மீது திமுகவுக்கு நம்பிக்கை குறைந்திருக்கலாம் எனவும் இதனால் இந்த கூட்டணி அடுத்துவரும் தேர்தல்களில் கைகோர்க்குமா என்பது சந்தேகமே என கூறி வருகின்றனர்.


