News February 26, 2025
கூகுளில் விரைவில் QR CODE முறை

கூகுள் மெயில் உள்ளிட்டவற்றை புதிய டிவைசில் பயன்படுத்த SMS மூலம் உறுதிப்படுத்தும் முறை தற்போது உள்ளது. இதை ஹேக்கர்கள் ஹேக் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை தடுக்க QR CODE மூலம் உறுதி செய்யும் முறையை கூகுள் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த முறை வந்தால், செல்போன் கேமரா ஸ்கேனர் மூலம் ஸ்கேனிங் செய்தால் போதும். SMS தேவையில்லை.
Similar News
News February 26, 2025
தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: திருமா

விஜய் தேர்தலை சந்தித்தால்தான் அவரை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தெரியவரும் என திருமாவளவன் கூறியுள்ளார். பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும், அவர்களால் பெரியளவில் சாதிக்க முடிவதில்லை என குறிப்பிட்ட அவர், சினிமா புகழை வைத்து எல்லாவற்றையும் ஓரங்கட்டி விட முடியாது என்றார். தமிழக மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருப்பதாகவும், அவர்களை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
News February 26, 2025
சிவராத்திரி: இன்று இரவு இதை செய்தால் குபேரன் ஆகலாம்

*சிவ லிங்கத்திற்கு ருத்ர அபிஷேகத்துடன் தயிர், கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் செல்வ வளம் பெருகும் * தேன் மற்றும் நெய்யால் அபிஷேகம் செய்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் *சிவலிங்கத்திற்கு தண்ணீரில் தேன் கலந்த அபிஷேகம் செய்தால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும் *வில்வம், சந்தனம் படைத்து வழிபட்டாலோ, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தாலோ ஆசைகள், விருப்பங்கள் அனைத்தும் உடனே நிறைவேறும்.
News February 26, 2025
PINK ஆட்டோ திட்டம்: அரசு புது அறிவிப்பு

பெண்களை மட்டுமே டிரைவர்களாக வைத்து இயக்கப்படும் பிங்க் ஆட்டோ திட்டம் மார்ச் 8இல் மாநில அரசால் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டம் தாெடர்பாக பெண்கள் அதிகாரமளித்தல், சமூகநலத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பிங்க் ஆட்டோக்களுக்கு பெண்கள் மட்டுமே உரிமையாளராக, டிரைவராக இருக்க வேண்டும். இந்த ஆட்டோக்களில் ஆண்களும் பயணிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.