News January 23, 2025

அண்ணா பல்கலை.,க்குள் செல்ல QR Code கட்டாயம்

image

அண்ணா பல்கலை.,யில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பல்கலை., வளாகத்தில் நுழைவதற்கு QR கோடுடன் கூடிய விசிட்டர் மேனேஜ்மென்ட் சிஸ்டம் அமைக்கப்படுகிறது. தேவையற்றவர்கள் உள்ளே நுழைவதை முற்றிலும் தடுக்கும் வகையில் QR Code முறை மிக விரைவில் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 22, 2025

நெல்லுக்கான ஆதார விலை உயர்வு: சக்கரபாணி

image

திமுக ஆட்சியில் நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கனமழை பெய்து வரும் நிலையில், தஞ்சை நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த அவர், நெல்கொள்முதல் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். குறைவான அளவே நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக EPS-ன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், செப்., முதலே அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

News October 22, 2025

மஞ்சள், ஆரஞ்சு, ரெட் அலர்ட்; எதை குறிக்குது?

image

➤பச்சை: வானிலை பாதுகாப்பாக உள்ளது. அன்றாட நடவடிக்கைகளை தொடரலாம் ➤மஞ்சள்: வானிலை மோசமடைய வாய்ப்பு. மழையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் ➤ஆரஞ்சு: போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு போன்ற பொதுசேவைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு ➤ரெட்: மிகவும் அபாயகரமான வானிலை. உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது. SHARE IT.

News October 22, 2025

இந்தியா மீதான USA வரி குறைகிறதா?

image

இந்தியா – USA இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இதன் படி, அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு விதிக்கும் வரிகள் தற்போதுள்ள 50% இலிருந்து 15–16% ஆக குறைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைத்து, USA-ன் சோளம் & சோயா உணவுப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!