News March 24, 2025
‘அஜித் அண்ணா..’ வாழ்த்தை கொட்டிய பி.வி.சிந்து!

அஜித் கார் ரேஸிங் டீம், நேற்று இத்தாலியில் முகெல்லோ சர்க்யூட்டில் நடந்த <<15866262>>12H ரேஸிலும்<<>> பங்கேற்று மூன்றாம் இடம்பிடித்து அசத்தியுள்ளது. அஜித் மற்றும் அவரது அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெளியிட்டுள்ள வாழ்த்துப்பதிவில், ‘எப்போதும் மூத்த சகோதரனாக இருக்கும் மனிதனுக்கு வாழ்த்துகள். அஜித் அண்ணா, இது வெற்றியை நோக்கிய இன்னொரு படி’ என வாழ்த்தி இருக்கிறார்.
Similar News
News August 20, 2025
M.Ed. விண்ணப்பப்பதிவு.. இன்றே கடைசி நாள்

அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2025 – 2026 கல்வியாண்டிற்கான M.Ed. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆக.11-ல் தொடங்கியது. இப்பாடப்பிரிவில் 6 அரசுக் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இந்நிலையில் இதற்கான விண்ணப்பப்பதிவு இன்றுடன் (ஆக.20) நிறைவடைகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
News August 20, 2025
AUS vs SA முதல் ODI: LSG வீரர்கள் அசத்தல்

SA vs AUS இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 98 ரன்கள் வித்தியாசத்தில் SA வென்றது. SA அணியில் மார்க்ரம் பொறுப்புடன் விளையாடி 81 பந்துகளுக்கு 82 ரன்கள் அடித்தார். அந்த அணியில் அதிக ரன்கள் அடித்தது அவர் தான். அதைப்போல் ஆஸி., அணியில் மிட்சல் மார்ஷ் 88 ரன்களை அடித்தார். இவர்கள் இருவரும் IPL-ல் LSG அணிக்காக சிறப்பாக விளையாடிய நிலையில், தற்போது அதே பார்மை தொடர்கின்றனர்.
News August 20, 2025
சுதர்சன் ரெட்டிக்கு திமுக ஆதரவு

துணை ஜனாதிபதி தேர்தலில் NDA சார்பில் போட்டியிடும் CPR-க்கு எதிராக I.N.D.I.A கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். தமிழரான CPR-க்கு திமுக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. இந்நிலையில், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூகநீதி, வேற்றுமையில் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்ட சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பதாக வெளிப்படையாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.