News May 24, 2024

அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து

image

மலேசியா மாஸ்டர் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றில், பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றுள்ளார். சீன வீராங்கனை ஹான்யூவிற்கு எதிரான இப்போட்டியில், சிந்து அபாரமாக விளையாடி முதல் செட்டை கைப்பற்றினார். அதன்பின், 2ஆவது செட்டில் தோல்வி அடைந்த அவர், 3ஆவது செட்டில் 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். கடந்த மாதம், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இவரிடம் சிந்து தோல்வி அடைந்தார்.

Similar News

News March 24, 2026

அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்

image

2026 தேர்தலில் தவாகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். வேல்முருகனை சந்தித்த அவர், கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த அவர், திடீரென தவாக பக்கம் தாவியுள்ளார். முன்னதாக, தனது 10 கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணியில் இடம்பெறுவேன் என வேல்முருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2026

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசு: அன்புமணி

image

மத்திய அரசை எதிர்த்தால் எதுவும் கிடைக்காது என்று அன்புமணி திமுகவை விமர்சித்துள்ளார். மத்திய அரசும் மாநில அரசும் ஒரே கூட்டணி அமைத்தால் மாநிலத்துக்கு நல்லது என்றும் திமுக மத்திய அரசை எதிர்ப்பதால் தமிழ்நாட்டுக்கு கட்டுமானங்கள், நிதியுதவி உள்ளிட்டவை கிடைக்காது என்றும் கூறியுள்ளார். மேலும், பாஜக, டெல்லியை குறைசொல்வது என்பது பயந்த முதலமைச்சர் மற்றும் திமுகவின் பேச்சு என்று கடுமையாக சாடியுள்ளார்.

News March 24, 2026

திமுகவுக்கு சாதகமாக தேர்தல் அதிகாரிகள்: செல்லூர் ராஜு

image

தேர்தல் கண்காணிப்பு குழுவில் திமுக தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமித்துள்ளதாக செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார். எந்த அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்ற பட்டியலை எடுத்து வருவதாகவும், அதை EPS மூலம் ECI-யிடம் கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே தேர்தல் விதிமுறைகளை மீறுவதற்கான வாய்ப்பிருப்பதாக மதுரை ஆட்சியர் மற்றும் ஆணையரை இடமாற்றம் செய்யக்கோரி பாஜகவினர் ECI-யிடம் மனு அளித்துள்ளனர்.

error: Content is protected !!