News March 27, 2025
புடின் சீக்கிரம் உயிரிழப்பார்: ஜெலன்ஸ்கி

ரஷ்ய அதிபர் புடின் விரைவில் உயிரிழப்பார், அப்படித்தான் போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். புடினுக்கு நரம்பியல் நோய், கேன்சர் என கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவி வரும் நிலையில், ஜெலன்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்ய அதிபரின் ஆரோக்கியம் சார்ந்த செய்திகளை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
Similar News
News December 4, 2025
திருப்பரங்குன்றம்.. திமுக அரசை சாடிய அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விஷயத்தில், கோர்ட் உத்தரவுகளை எல்லாம் ஒன்றுமில்லை என திமுக அரசு நினைக்கிறதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் நூற்றுக்கணக்கான போலீஸை குவித்து, பக்தர்கள் மதச்சடங்கு செய்வதை திமுக அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தில் சனாதன தர்மத்தை தனிமைப்படுத்துவதற்கான காரணத்தை திமுக அரசு கூறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நியமித்துள்ளார். CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலால் துறையின் சேப்பாக்கம் பகுதியின் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். EPS-ன் எடப்பாடி தொகுதிக்கு சேலம் கலால் துறையின் உதவி ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
News December 4, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 4, கார்த்திகை 18 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12.15 AM – 1:15 AM & 6.30 PM – 7.30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பவுர்ணமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்


