News April 2, 2025

ஈரானை தொட்டால்.. டிரம்பை எச்சரித்த புடின்

image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பேரழிவை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ஈரானை மிரட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அமெரிக்கா- ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த முன்வருவதாகவும் ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் எச்சரித்து இருந்தார்.

Similar News

News March 10, 2026

தருமபுரியின் பெருமை பற்றி தெரியுமா?

image

தருமபுரியில் உள்ள சென்றாய பெருமாள் கோவில் தமிழகம் முழுவதும் பிரலமான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ஒரு ஓவல் வடிவ கோட்டையாகும். இந்த கோவில் அதியமான் மற்றும் தகோதூர் வம்சங்களின் பண்டைய தலைநகராக செயல்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றன. 13ஆம் நூற்றாண்டின் கலைப்படைப்பு கோவிலின் உட்புற குழியின் சுவர்களில் வரிசையாக உள்ளது. இதனை காண்பதற்கு ஒரு நல்ல சுற்றுலா பகுதியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க

News March 10, 2026

பெட்ரோல், டீசல் விலை ரூ.22 உயர்வு… எங்கு தெரியுமா?

image

ஈரான் போர் காரணமாக இந்தியா உள்பட உலகில் பல நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு இப்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலைகளையும் லிட்டருக்கு (இலங்கை கரன்சியில்) ரூ.22 உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் எரிபொருள் விலை உயராது என அரசு அறிவித்துள்ளது நிம்மதி அளித்தாலும், சர்வதேச நிலைமைகளால் சூழல் மாறலாம்.

News March 10, 2026

BIG NEWS: தமிழக தேர்தல் தேதி.. புதிய அப்டேட்

image

TN உள்பட 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை மார்ச் 15-ம் தேதி CEC அறிவிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது, TN-க்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!