News May 7, 2024
5ஆவது முறையாக ரஷ்ய அதிபராக புதின் பதவியேற்பு

ரஷ்ய அதிபராக 5ஆவது முறையாக புதின் பதவியேற்றார். எல்சினுக்கு பிறகு, 1999இல் அதிபரான அவர், தொடர்ந்து அப்பதவியை வகிக்கிறார். இடையில் 2008 முதல் 2012 வரை மெத்வதேவ் அதிபராக இருந்தார். அதன்பிறகு, புதின் மீண்டும் அதிபரானார். இன்று, 5ஆவது முறையாக பதவியேற்ற புதின், 2030 வரை அப்பதவியை வகிப்பார். இதன்மூலம் ஸ்டாலினுக்கு பிறகு, அதிபராக நீண்டகாலம் இருந்த தலைவர் எனும் பெருமையை பெறுவார்.
Similar News
News August 22, 2025
மகளிர் உலகக் கோப்பை: பெங்களூரு போட்டிகள் மாற்றம்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பரில் தொடங்குகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த போட்டிகள் நவி மும்பையின் DY படில் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதன்படி 3 லீக், அரையிறுதி & இறுதிப் போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன. முன்னதாக, RCB வெற்றிப் பேரணியின்போது 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கர்நாடக பேரவையில் கூட்ட கட்டுப்பாடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
News August 22, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கிய (ஜூலை 15) முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து ஆகஸ்ட் 28-ம் தேதி விவரங்கள் வெளியாகும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிதாக திட்டத்தில் இணைபவர்களுக்கு பணம் வரவு வைப்பது தொடர்பான அறிவிப்பை செப். 15-ல் அரசு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
News August 22, 2025
SPACE: விண்வெளியில உங்க உடலுக்கு என்னாகும் தெரியுமா?

பூமில இருந்து உணவ விண்வெளிக்கு எடுத்துட்டு போய் அங்க சாப்பிட்டா அந்த உணவோட ஒரிஜினல் சுவையும் வாசனையும் வித்தியாசமா இருக்குன்னு ஆய்வுல தெரியவந்துருக்கு. விண்வெளியில gravity கம்மியா இருக்குறதுனால, மனித உடல்ல இருக்க திரவங்கள் தலையை நோக்கி நகருமாம். இதனால, உடல்ல இருக்க சுவை, வாசனை உணர்வுகள் பாதிக்கப்படுதாம். இதனால உணவோட சுவை மற்றும் வாசனை விண்வெளியில வேற மாதிரி இருக்குறதா ஆய்வுகள் சொல்லுது.