News March 25, 2025
டிரம்புக்கு பரிசு அனுப்பிய புதின்

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான நட்புறவு நாளுக்கு நாள் வலுவடைகிறது. இம்மாத தொடக்கத்தில் நடந்த சந்திப்புக்குப் பிறகு டிரம்பின் தூதரிடம், அவரது உருவப்படத்தை புதின் பரிசாக வழங்கியுள்ளார். இந்த பரிசைக் கண்டு டிரம்ப், மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. எப்போதும் எதிரும், புதிருமாக இருந்த அமெரிக்கா-ரஷ்யா உறவு, டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு மேம்பட்டு வருகிறது.
Similar News
News November 28, 2025
தி.மலை: தீபத்துக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

தி.மலை கார்த்திகை மகா தீபம் டிச.3ல் நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில், அரசு பிரத்யேக மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், தற்காலிக பேருந்து நிறுத்தம், கார் பார்க்கிங், குடிநீர் வசதி, மருத்துவ முகாம், கழிவறைகள், ஆம்புலன்ஸ் வசதி எங்குள்ளது என தெரிந்துகொள்ளலாம். இந்த <
News November 28, 2025
செங்கோட்டையன் சென்ற விமானத்தில் கோளாறு.. பதற்றம்

சென்னையில் இருந்து செங்கோட்டையன் சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. கோவைக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென சிக்னல் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர், விமானம் மீண்டும் கோவைக்கு புறப்பட உள்ளது.
News November 28, 2025
வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. ஸ்டாலின் அறிவிப்பு

டிட்வா புயலையொட்டி, முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்பட மாவட்ட கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்திய அவர், பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு 16 SDRF மற்றும் 12 NDRF படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


