News December 5, 2024
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பாராட்டிய புதின்

இந்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டியுள்ளார். பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிலையான சூழ்நிலையை மோடி உருவாக்கியுள்ளதாகவும் பாராட்டினார். விரைவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கான உற்பத்தி ஆலைகளை இந்தியாவில் அமைக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News April 29, 2025
சந்தேகத்தால் சிதைந்த குடும்பம்

வீட்டில் அண்ணன் உள்ளாடையுடன் சுற்றித் திரிந்ததால் சந்தேகத்தில் தம்பி தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். உ.பியின் கோரக்பூரில் தம்பிக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. புதுப்பெண் சரோஜின் சமையலை மாமியார், மைத்துனர் என அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனை விரும்பாத கணவர் சதீஷ், சரோஜை அழைத்து கண்டித்துள்ளார். பின்னர், சந்தேகத்தில் மனைவியை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
News April 29, 2025
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..!

திருப்பதியில் வரும் பக்தர்களுக்கு சேவை செய்ய தொடங்கப்பட்டது தான் ஸ்ரீவாரி சேவை. இந்த சேவையில் ஜூன் மாதம் பங்கேற்க நாளை அதாவது, ஏப்ரல் 30-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். காலை 11 மணிக்கு ஜெனரல் சேவைக்கும், மதியம் 12 மணிக்கு நவநீத சேவைக்கும், மதியம் 1 மணிக்கு பரகமணி சேவைக்கும், மதியம் 2 மணிக்கு சீனியர் சேவைக்கும் முன்பதிவு நடைபெறுகிறது. முன்பதிவு செய்ய <
News April 29, 2025
அவையை அமளியாக்கிய ‘ஊர்ந்து’.. CM விளக்கம்!

காவல்துறை மானிய கோரிக்கைக்கு CM அளித்த பதிலுரையில் இடம்பெற்ற ‘ஊர்ந்து’ என்ற சொல்லை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்த CM ஸ்டாலின், ஊர்ந்தோ தவழ்ந்தோ என, தான் யாரையும் குறிப்பிடவில்லை என விளக்கம் அளித்தார். முன்னதாக, CM ஸ்டாலின் பதிலுரையை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புறக்கணித்தார்.