News December 2, 2024
இந்தியா வாங்க புதின்.. மோடி அழைப்பு

இந்தியா வருமாறு புதினுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். பரஸ்பரம் இந்தியா, ரஷ்யத் தலைவர்கள், ஒவ்வொரு ஆண்டும் பிற நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதினை மாேடி அழைத்துள்ளார். இதையேற்று, 2025 ஆரம்பத்தில் அவர் இந்தியா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால், 2022 உக்ரைன் போர் தொடங்கியபிறகு இந்தியாவில் புதின் மேற்கொள்ளும் முதல் பயணமாகக் கருதப்படும்.
Similar News
News August 22, 2025
மதுரை மாநாட்டில் விஜய் தவறவிட்டது என்ன?

திமுக, பாஜகவை விமர்சித்த விஜய், பல பிரச்சனைகள் குறித்து ஆழமாக பேசாமல் விட்டது பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நிகழும் சாதிய வன்கொடுமைகள் தொடர்பாக அவர் பேசாமல் விட்டது அரசியல் கணக்கு என ஒருசாரார் கூறினாலும், அதுவே அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என சிலர் கூறுகின்றனர். இளைஞர் அஜித் மரணம், நெல்லை கவின் படுகொலை குறித்து அவர் பேசியிருக்க வேண்டும் என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?
News August 22, 2025
புத்துணர்வூட்டும் புதினா தேநீர்!

ஹெர்பல் டீ வகைகளில் முக்கியமானது புதினா தேநீர். பிரெஷ் புதினா இலைகள் (அ) வெயி்லில் உலர்த்திய இலைகள் கொண்டு புதினா தேநீர் தயாரிக்கலாம். *தினமும் தேனுடன் கலந்து அருந்துவதால் சரும பாதிப்புகளை வெகுவாக குறைக்கலாம். *புதினாவின் மணமும் சுவையும், இதனை அருந்தும்போது நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளி்க்கும். *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், முகச் சுருக்கங்கள் போக்கி இளமை தோற்றம் பெற உதவும். SHARE IT
News August 22, 2025
Health Tips: அடிக்கடி மூட்டு வலி வருதா? ஆபத்து!

இப்போதெல்லாம் இளம்வயதினர் கூட மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அடிக்கடி மூட்டு வலி ஏற்படுவது ஆபத்தான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள். யூரிக் அமிலம் அதிகரிப்பு, எலும்பு தேய்மானம், உயர் ரத்த அழுத்த அபாயம் ஆகியவற்றுக்கு மூட்டு வலிதான் முதல் அறிகுறியாம். இதனால் அடிக்கடி மூட்டு வலி ஏற்படுகிறவர்கள் டாக்டரை அணுகுவது சிறந்தது. மூட்டு வலி இருக்குற உங்க ஃப்ரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க!