News February 24, 2025
புஷ்பா படம் ஸ்டூடண்ட்ஸை கெடுக்குது.. கடுப்பில் பள்ளி HM

‘புஷ்பா’ படம் மாணவர்களை சீரழிப்பதாக ஹைதராபாத் பள்ளியின் HM வருத்தம் தெரிவித்துள்ளார். நாயகனின் தனித்துவமான Mannersim, பேச்சு நடை, செய்கைகளை அப்படியே மாணவர்களை செய்து வருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். சமூகத்தை சீரழித்து, மாணவர்களை தவறாக வழிநடத்தும் இது போன்ற படங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி என்ன சொல்றீங்க?
Similar News
News February 24, 2025
ஒற்றைத் தலைமையே தொடர் தோல்விக்கு காரணம்: OPS

அதிமுகவின் தொடர் தோல்விக்கு ஒற்றைத் தலைமையே காரணம் என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அதிமுக சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம், வஞ்சகம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்வதாக இபிஎஸ்-ஐ மறைமுகமாகச் சாடியுள்ளார்.
News February 24, 2025
ராஜகோபுரத்தில் 40 அடி உயர வேல்: பக்தர்கள் பரவசம்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதையொட்டி 137 அடி உயரமும், 9 நிலைகளும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 41 ஆண்டுகளுக்குப் பின் ராஜகோபுரத்தின் 9 கலசங்களும் கீழே இறக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜகோபுரத்தில் 40 அடி உயர பிரமாண்ட வேல் பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
News February 24, 2025
வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த மாணவர்கள்

கோவையில் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டின் மொட்டை மாடியில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா வளர்த்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அரியலூரைச் சேர்ந்த ஒருவர் என 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில், மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக அதிமுக, பாஜக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.