News March 17, 2024
புஷ்பா படப்பிடிப்பில் அசெளகரியமாக இருந்தது

புஷ்பா படத்தின் “ஊ சொல்றியா மாமா” பாடல் படப்பிடிப்பில் அசெளகரியத்தை உணர்ந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “பேமிலி மேன் 2 சீரிஸில் நடித்தபோது இருந்த அசெளகரியத்தை, ‘ஊ சொல்றியா’ பாடல் படப்பிடிப்பிலும் உணர்ந்தேன். நடிகராக என்ன செய்யலாம் என்பதை ஆராயவே, அதில் நடிக்க முடிவெடுத்தேன். எப்போதும் எனது பாலினம் மீது அசெளகரியத்தையே உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News December 12, 2025
விடுமுறை.. 3 நாள்களுக்கு கூடுதல் பஸ்கள்

வார விடுமுறையையொட்டி, மக்களின் வசதிக்காக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல, இன்று முதல் டிச.14 வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000 பேர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம் (அ) TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை ஈசியாக்குங்க நண்பர்களே!
News December 12, 2025
டிசம்பர் 12: வரலாற்றில் இன்று

*1911 – இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது. *1911 – UK-ன் 5-ம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடினார். *1931 – நடிகை சௌகார் ஜானகி பிறந்தநாள். *1950 – நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள். *1970 – இயக்குநர் சேரன் பிறந்தநாள். *1981 – கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்தநாள்.
News December 12, 2025
சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் சூப்பர் அப்டேட் வருமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று பிறந்தநாள். இதை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ள அவரது ரசிகர்கள், சில எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கின்றனர். ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் சிறப்பு போஸ்டர் அல்லது வீடியோ வெளியாகுமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேபோல், கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் அறிவிப்பு, இயக்குநர் பெயர் அறிவிக்கப்படுமா என்றும் ஏங்கி தவித்து வருகின்றனர்.


