News December 18, 2024
‘புஷ்பா 2’ சோகம்: முதலில் தாய்.. இப்போது மகன்

ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் மூளைச்சாவு அடைந்திருப்பது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவரது தாய் உயிரிழந்த நிலையில், மகனும் கவலைக்கிடமாக இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறி, சமீபத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 6, 2025
விளக்கம் கேட்காமல் பதவி பறிப்பு: செங்கோட்டையன்

தன்னிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று தான் கூறியதைப்போல் ஒருங்கிணைப்பு பணி தொடரும் எனவும் கூறியுள்ளார். மேலும், பொதுச்செயலாளருடன், 6 பேர் கொண்ட குழு சந்தித்து ஒருங்கிணைப்பு தொடர்பாக பேசியது உண்மை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
News September 6, 2025
TTV பேசியது பற்றி தனக்கு தெரியாது: நயினார் விளக்கம்

கூட்டணியை நயினார் நாகேந்திரன் சரியாக வழிநடத்தவில்லை என <<17628741>>TTV தினகரன்<<>> குற்றம்சாட்டியிருந்த நிலையில், ஏன் அப்படி சொன்னார் என தனக்கு தெரியாது என நயினார் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவை பொறுத்தவரையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் எனவும், எந்த கட்சியையும் சிறிய கட்சி என நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.
News September 6, 2025
GST மாற்றத்தால் 3,700 இழப்பு: SBI கணக்கீடு

GST சீர்திருத்ததால் ஆண்டுதோறும் ₹48,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது. ஆனால், அரசுக்கு ₹3,700 கோடி மட்டுமே இழப்பு ஏற்படும் என SBI மதிப்பிட்டுள்ளது. இந்த மாற்றங்களால் நுகர்வு அதிகரிக்கவும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்றும் கூறியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வரி குறைப்பது, சில்லறை பணவீக்கத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.