News December 21, 2024
புஷ்பா 2: கொந்தளித்த கூல் சுரேஷ்

ஒரு நாள் சிறைக்கு சென்ற அல்லு அர்ஜுனை நேரில் சந்திக்கும் பிரபலங்கள், உயிரிழந்த ரசிகை ரேவதி குறித்து பேசாதது ஏன் என நடிகர் கூல் சுரேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “<<14867013>>ரேவதியின்<<>> மகன் மூளைச்சாவு அடைந்துள்ளான். அவரை நேரில் சென்று பார்க்க யாருக்கும் நேரமில்லை. பண உதவி செய்தால் மட்டும் போதாது, நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 5, 2026
மதுரை: இளைஞர் தற்கொலை; அதிர்ச்சி காரணம்

சக்கிமங்கலம் அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார்(35). இவருக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்த மன அழுத்தத்தில் இருந்த முத்துக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தந்தை கோடாங்கி அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் விசாரணை.
News March 5, 2026
வாழ்க்கை பிரகாசிக்க செய்யும் வெண்பூசணி வழிபாடு

புதுக்கோட்டை, திருமயம் என்னும் ஊரில் 350 ஆண்டுகள் பழமையான கோட்டை பைரவர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே வடக்கு பார்த்தபடி, தனிகோயில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே. இக்கோயிலில் மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு வெண்பூசணி விளக்கேற்றி வழிபடுவது, அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க உதவுமாம். பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம், தொழில் அபிவிருத்தி ஏற்படும்.
News March 5, 2026
காங்., – திமுக கூட்டணி.. மாணிக்கம் தாகூர் ரியாக்ஷன்

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தேவை என மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கூறி வந்த நிலையில், திமுக 3+1 சீட்களை கூடுதலாக ஒதுக்கி காங்.,-ஐ கூட்டணியில் தக்கவைத்து கொண்டுள்ளது. இந்நிலையில், தலைமையின் முடிவை ஏற்பதாக X பதிவில் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், பொம்மை காரை கையில் வைத்துள்ள சிறுவன், BMW காரை ஏங்கி பார்ப்பது போன்ற போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில், கண்டிப்பாக ஒருநாள் ஆசை நிறைவேறும் என்ற வாசகம் உள்ளது.


