News December 6, 2024
‘புஷ்பா 2: தி ரூல்’ என் மனதை தொட்டுவிட்டது: அட்லீ

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை இயக்குநர் அட்லீ மனந்திறந்து பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில், “புஷ்பா 2: தி ரூல் படம் உண்மையிலே என் மனதை தொட்டுவிட்டது. அல்லு அர்ஜூன் சார், உங்களுடைய நடிப்பு சூப்பராக உள்ளது. மற்றொரு பிளாக்பஸ்டருக்காக வாழ்த்துக்கள் சார். என்னவொரு கடினமான உழைப்பு, மிகவும் பிடித்திருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 23, 2026
அதிமுகவுக்காக கவலைப்பட்ட கனிமொழி

அதிமுக தங்களுக்கு உடன்பாடு இல்லாதவர்களுடன் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினால் எப்படி வெற்றி பெற முடியும் என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக என்ற கட்சி இன்னும் கொஞ்சம் நாளாவது பத்திரமாக இருக்க வேண்டும் என்ற அவர், திமுகவின் கவலையும் அதுவாகத்தான் உள்ளது என்று தெரிவித்தார். மேலும், தேர்தல் வருவதால் பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார் என விமர்சித்துள்ளார்.
News January 23, 2026
டிகிரி போதும்.. வங்கியில் ₹32,000 சம்பளம்!

தேசிய விவசாய & கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 162 Development Assistant காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 21- 35 வரை *கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி *தேர்ச்சி முறை: முதல்நிலை, முதன்மை & மொழித் திறன் தேர்வுகள் நடைபெறும் *சம்பளம்: ₹32,000 வரை *பிப்ரவரி 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News January 23, 2026
‘அண்ணன் EPS’-ஐ முழு மனதாக ஏற்கிறோம்: டிடிவி

NDA கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் EPS என TTV கூறியதும், கூட்டத்தில் இருந்தவர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். மேலும், ‘அண்ணன்’ EPS-ஐ முழு மனதார ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் அம்மாவின் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை இருந்தது உண்மைதான். ஆனால், அம்மாவின் ஆட்சியை கொண்டு வர அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம் என கூறியுள்ளார்.


