News December 5, 2024
புஷ்பா 2: Review & Rating

புஷ்பா 1வில் சந்தன கடத்தல் கும்பலின் தலைவனாக உயரும் புஷ்பராஜ், சர்வதேச அளவில் எப்படி முன்னேறினார் என்பதே புஷ்பா 2வின் கதை. மாஸ் ஹீரோவாக அல்லு அர்ஜுன் இன்டர்வெல், கிளைமேக்ஸில் ரசிகர்களை அசத்தி விட்டார். 2nd halfல் எமோஷனலாக செல்லும் திரைக்கதையில், முக்கிய அம்சமான கடத்தல் தொடர்பான காட்சிகள் மேஜர் மிஸ்ஸிங். வில்லன் நடிகர்களும் பெரிதாக சோபிக்காததும், படத்தின் நீளமும் மைனஸ். Rating: 2.75/5
Similar News
News August 23, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (23.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 23, 2025
குப்பையையும் விட்டுவைக்காத திமுக அரசு: EPS

நாட்டிலேயே கடன் வாங்குவதில் முதலிடம் தமிழ்நாடு என்ற சாதனையை CM ஸ்டாலின் படைத்துள்ளதாக EPS சாடியுள்ளார். திருவெறும்பூர் பரப்புரையில் பேசிய அவர், அதிமுகவின் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வழங்கப்படுகிறது என்றார். மேலும், திமுக ஆட்சியில் DGP முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து நியமனங்களிலும் ஊழல் நடப்பதாகவும், குப்பைக்கு கூட வரி போட்டு மக்களின் பணம் சுரண்டப்படுகிறது எனவும் விமர்சித்தார்.
News August 23, 2025
ஜனநாயகனில் N.ஆனந்திற்கு முக்கிய ரோல்…

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சில பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். தவெக பொ.செ., N.ஆனந்த் போராட்டக்காரராக நடித்திருக்கிறாராம். விஜய்யின் முந்தைய படங்களை இயக்கிய அட்லீ, நெல்சன், லோகேஷ் கனகராஜ் பத்திரிகை நிருபர்களாகவும், அனிருத் பாடல் ஒன்றில் தோன்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் கேமியோவுக்கு ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.