News August 9, 2024

‘புஷ்பா 2’ பட ஃபகத் ஃபாசிலின் சிறப்பு போஸ்டர் வெளியீடு

image

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் ஃபகத் ஃபாசிலின் சிறப்பு போஸ்டர் ஒன்றை அப்படக்குழு வெளியிட்டுள்ளது. இணையத்தில் வைரலாகியுள்ள அந்த போஸ்டரில் லுங்கி அணிந்துக் கொண்டு ஒரு கையில் கோடாரியும், மற்றொரு கையில் துப்பாக்கியும் ஏந்தியபடி மாஸான லுக்கில் காணப்படுகிறார். இந்தப் படம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என மீண்டும் படக்குழு அறிவித்துள்ளது.

Similar News

News September 18, 2025

₹12 ஆயிரம் போட்டால் ₹40 லட்சம் கிடைக்கும் மாஸ் திட்டம்!

image

போஸ்ட் ஆபீஸின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் (PPF) மூலம் மாதம் ₹12,500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகள் கழித்து ₹40.68 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். அதாவது, ஒவ்வொரு மாதமும் ₹12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ₹22.5 லட்சம் இருக்கும். அத்துடன், அரசின் 7.1% வட்டி விகிதத்தை சேர்த்தால் ₹40.68 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைய போஸ்ட் ஆபீஸுக்கு செல்லுங்கள். SHARE.

News September 18, 2025

256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு: அண்ணாமலை

image

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால் அவற்றை கைவிட அரசு முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகிருப்பதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக கருணாநிதியின் சிலை வைத்தது மட்டும்தான் எனவும் விமர்சித்துள்ளார்.

News September 18, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

image

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!