News December 19, 2024
₹1,500 கோடி வசூலைக் கடந்த ‘புஷ்பா 2’

அல்லு அர்ஜுன் நடித்து, கடந்த 5ஆம் தேதி வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம், இதுவரை உலகம் முழுவதும் ₹1,508 வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தி வெர்ஷனில் மட்டும் இப்படம் ₹618 கோடி வசூலித்து, பாலிவுட்டில் 2ஆவது பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது. ‘பாகுபலி 2’ படத்தின் மொத்த வசூலான ₹1,800 கோடி சாதனையை முறியடிக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News September 2, 2025
சேலத்தில் ஆவின் பால் கடை வைக்க ஆசையா?

சேலம் மக்களே.., தமிழக அரசின் தாட்கோ(TAHDCO) ஆவின் பாலகம் மானியத் திட்டம் மூலம் உங்கள் ஏரியாவில் நீங்களும் பாலகம் அமைக்கலாம்.
▶️இதற்கு அரசு சார்பாக ரூ.90 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
▶️இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
▶️இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க உரிய ஆவணங்கள் வைத்திருத்தல் அவசியம். இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்த <
News September 2, 2025
உடலை பாதிக்கும் Tooth Brush.. உடனே மாத்திடுங்க

பற்களை சுத்தமாக வைக்க தினமும் பிரெஷ் செய்தால் மட்டும் போதாது, அந்த பிரெஷ் சரியாக இருக்கிறதா என்பதை பார்ப்பதும் அவசியம். டூத் பிரஷை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என டாக்டர்கள் சொல்கின்றனர். பழைய பிரெஷ்ஷில் பாக்டீரியா, பூஞ்சைகள் இருப்பதால் அது உடலை பாதிக்கலாம். சில சமயங்களில் 3 மாதங்கள் ஆகவில்லை என்றாலும், நீங்கள் நோய் வாய்ப்பட்டு குணமாகும் போது பிரெஷை மாற்றுவது அவசியம். SHARE.
News September 2, 2025
அரசியல் ஆசை குறித்து மனம் திறந்த கிச்சா சுதீப்

தமிழில் ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த கிச்சா சுதீப், தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சில நேரங்களில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை சிலர் தூண்டுகிறார்கள் என்றும், ஆனால் தற்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன் எனவும் உறுதியாக கூறியுள்ளார். அதேசமயம், அரசியலுக்கு வந்துவிட்டால் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.