News March 24, 2025
சுத்திகரிப்பு நீர்: அமைச்சர் நேரு விளக்கம்

சிங்கப்பூரில் கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். ஆனால், நம் மக்கள் வேண்டாம் என்கின்றனர் என சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு விளக்கமளித்துள்ளார். கழிவுநீரை சுத்திகரித்தால் 100 லிட்டரில் 94 லிட்டர் நல்ல நீராக கிடைக்கும். ஆனால், நம் மக்கள் அதை வேண்டாம் என்கின்றனர். எனவே, அதை ஆற்றில் விடுவதா? விவசாயத்திற்கு வழங்குவதா என மக்களிடம் கருத்து கேட்டப் பின் முடிவெடுப்போம் என்றார்.
Similar News
News March 26, 2025
ஹிந்தி Commentary கேவலமாக உள்ளதா? ஹர்பஜன் பதில்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் இந்தி, தமிழ், ஆங்கிலம் என பல இந்திய மொழிகளில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இதில் ஹிந்தி Commentary அறிவு சார்ந்ததாக இல்லாமல், வெறுமனே கிண்டல், கேலியாக மட்டும் உள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சாடினர். இதனிடையே ரசிகர் ஒருவரின் கருத்துக்கு பதில் அளித்துள்ள ஹர்பஜன், “உங்களது கருத்துக்கு நன்றி.. கண்டிப்பாக மாற்றிக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
News March 26, 2025
முன்னாள் MLA மறைவு: ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் MLA கருப்பசாமி பாண்டியன் மறைவையொட்டி, ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். 1977இல் ஆலங்குளம், 1980இல் பாளையங்கோட்டை, 2006இல் தென்காசி தொகுதியில் இருந்து MLA-ஆக தேர்வாகி மக்களுக்காக உழைத்தவர். நீண்டகாலம் சட்டப்பேரவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
News March 26, 2025
பிரேசிலை புரட்டி எடுத்த அர்ஜென்டினா.. 2026 WC தகுதி

2026 உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, பிரேசிலை எதிர்கொண்டது. இதில் 3வது நிமிடத்திலேயே முதல் கோலை அர்ஜென்டினா அடித்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய அந்த அணி 4 கோல்களை அடித்து பிரேசிலை நிலைகுலைய வைத்தது. பதிலுக்கு ஒரு கோல் மட்டுமே பிரேசிலால் அடிக்க முடிந்தது. இதன் மூலம் 4 – 1 என்ற நிலையில் வெற்றி பெற்று அர்ஜென்டினா 2026 ஃபிஃபா உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது.