News May 16, 2024
பொம்மை தேர்தல் ஆணையம்: மம்தா விமர்சனம்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி பொம்மை தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். பாஜக 400 இடங்களில் வெற்றி பெறுவது ஒருபோதும் நடக்காது என்ற அவர், பாஜகவின் தோல்வி முடிவு செய்யப்பட்ட ஒன்று எனக் கூறினார். நாட்டில் பொதுமக்களின் போராட்டங்களை தேர்தல் அதிகாரிகள் ஒருபோதும் உணர்ந்து கொள்ள போவதில்லை என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்தார்.
Similar News
News October 21, 2025
ஹமாஸை கடுமையாக எச்சரித்த டிரம்ப்

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதால் ஹமாஸை டிரம்ப் கண்டித்துள்ளார். வன்முறை நிறுத்தப்படாவிட்டால் ஹமாஸ் அழிக்கப்படும் என எச்சரித்த அவர், போர் நிறுத்தம் வன்முறையை ஓரளவு குறைக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அது மீண்டும் மீறப்பட்டால், எதிர் நடவடிக்கை மோசமாக இருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
வாழ்வில் வெற்றி பெற… இவற்றை ஃபாலோ பண்ணுங்க!

★நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ளுங்கள் ★சோம்பேறித்தனத்தை கைவிடுங்கள் ★யாருடனும் உங்களை ஒப்பிட்டு கொள்ளாதீர்கள் ★பிறரை பார்த்து பொறாமைப்படுவதை நிறுத்துங்கள் ★எல்லா விஷயங்களிலும் Over Confidence ஆக இருந்துடாதீங்க ★எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, தற்போது செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள் ★யார் என்ன சொன்னாலும், உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். SHARE IT.
News October 21, 2025
BREAKING: அதிமுகவில் இணைந்தார்

NTK மாநில மருத்துவ அணி செயலாளர் ஐசக், அக்கட்சியில் இருந்து விலகி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலையில் தன்னை ADMK-வில் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரும் தங்களை ADMK-வில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நெருங்குவதால், மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் சேர்க்க நிர்வாகிகளுக்கு, EPS புதிய அசைன்மெண்ட் கொடுத்துள்ளார்.