News May 8, 2025
பஞ்சாப் அணி பேட்டிங்

இன்றைய ஆட்டத்தில் PBKS – DC அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 8:30-க்கு தொடங்கும்
Similar News
News December 13, 2025
சியா விதைகளை அதிகம் சாப்பிட்டால் ஆபத்து!

ஆரோக்கியமான உணவுகளில் தவறாமல் இடம்பெறுவது சியா விதைகள். நன்மைகள் அதிகம் என்றாலும் அளவை மிஞ்சினால் பக்க விளைவுகளும் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். *அதிக நார்ச்சத்து செரிமான பிரச்னைகளை (வயிறு வலி, வீக்கம்) ஏற்படுத்தும் *விதைகள் உணவுக்குழாயில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம் *BP-யை குறைப்பதால், ஏற்கெனவே Low BP இருப்பவர்களுக்கு தலைசுற்றல் ஏற்படுத்தும் *சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்.
News December 13, 2025
வெற்றி பெற்றார் கேரளாவின் முதல் பெண் IPS அதிகாரி

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் படி, 45 ஆண்டுகால CPM – LDF கூட்டணி தொடர் வெற்றிக்கு முடிவு கட்டி, திருவனந்தபுரம் மாநகராட்சியை <<18551942>>பாஜக<<>> கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில் சாஸ்தமங்கலம் வார்டில் போட்டியிட்ட BJP வேட்பாளரும், கேரளாவின் முதல் IPS அதிகாரியுமான ஸ்ரீலேகா, CPM வேட்பாளர் அம்ரிதாவை 708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார். இவரே திருவனந்தபுரம் மேயராவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம்.
News December 13, 2025
BREAKING: வரலாறு காணாத விலை உயர்வு.. புதிய உச்சம்

தங்கத்தை போன்று முட்டை விலையும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாமக்கல் கோழிப் பண்ணை வரலாற்றில் முதன்முறையாக முட்டை கொள்முதல் விலை ₹6.20 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ₹6.15-ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சில்லறை விலையில் 1 முட்டை ₹8 வரை விற்க வாய்ப்புள்ளது. உங்க பகுதியில் முட்டை விலை என்ன?


