News April 15, 2025
IPL தொடரில் இருந்து வெளியேறிய பஞ்சாப் வீரர்

பஞ்சாப் அணி வீரர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக நடப்பு IPL சீசனில் இருந்து வெளியேறியுள்ளார். SRH-க்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த நிலையில் அவர் தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 3-ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதுவரை கோப்பையை வென்றிராத பஞ்சாப் அணி இந்தாண்டாவது அந்த சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?
Similar News
News January 19, 2026
அந்த 88 மணி நேரம்.. நினைவுகூர்ந்த ராஜ்நாத்

நாக்பூரில் ஒரு வெடிமருந்து ஆலை திறப்பு விழாவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட நாகஸ்திரா ட்ரோனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் பார்வையிட்டார். அப்போது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை சுமார் 88 மணி நேரம் நீடித்தது, அப்போது எதிர்கொண்ட தீவிரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மறுபுறம், புதிய போர் முறைகள் உருவாகி வருகின்றன என்று கூறினார்.
News January 19, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 19, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 585 ▶குறள்: கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று ▶பொருள்: ஒரு உளவாளி என்பவன், மற்றவர்களின் மனதில் எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தாத தோற்றத்துடன், சந்தேகப்பட்டு பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், தனது நோக்கத்தை ஒருபோதும் வெளிப்படுத்தாதவனாகவும் இருப்பான்.


