News August 27, 2024
தண்டனை முன்மாதிரியாக அமைய வேண்டும்: பிரித்விராஜ்

மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை என, நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை குறித்து நடிகர் பிரித்விராஜ் கருத்து கூறியுள்ளார். புகாரில் உண்மை இருந்தால், அதற்கான தண்டனை முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பொய் என்றால், அதற்கும் தண்டனை வழங்குமாறு யோசனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த புகார்கள் குறித்து மிகவும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News July 6, 2025
இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை தொடங்குகிறது

பொறியியல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை(ஜூலை 7) முதல் தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 14-ம் தேதி முதல் தொடங்குவதாக TNEA அறிவித்துள்ளது. AI, Data Science, Computer Science உள்ளிட்ட பிரிவுகளில் சேர மாணவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ALL THE BEST..!
News July 6, 2025
கூலி படம் ஆகஸ்ட் 14 ரிலீஸ் இல்லை?

ஒட்டுமொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்திருக்கும் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ல் வெளியாகாமல் தள்ளிப்போகும் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான ஆமிர் கான் போஸ்டரில் படம் IMAX-ல் வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், War 2 படம் இந்தியாவில் உள்ள மொத்த IMAX ஸ்கிரீனையும் ஒப்பந்தம் செய்து வைத்திருக்கும் நிலையில், கூலி படத்தின் இந்த போஸ்டர் தான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை படம் தள்ளிப்போகுமோ?
News July 6, 2025
FLASH: கி.வீரமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி(91) சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி, மயக்கம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.