News January 20, 2025

தண்டனை போதாது.. கோர்ட் முன்பு டாக்டர்கள் போராட்டம்

image

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், <<15204843>>குற்றவாளி <<>>சஞ்சய் ராய்க்கு இன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், குற்றவாளிக்கு சாகும் வரை தண்டனை போதாது எனவும், இன்னும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தீர்ப்பளித்த சியல்டா கோர்ட்டுக்கு முன்பு இளநிலை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News March 15, 2026

தினமும் காலையில் கருவேப்பிலை சாப்பிடுங்க

image

▶கருவேப்பிலையில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, தாமிரம், வைட்டமின்கள், மெக்னீசியம் சத்துக்கள் உள்ளன. ▶கண்புரை நோய் வராமல் தடுத்து, பார்வையை மேம்படுத்த உதவும். ▶இன்சுலின் உற்பத்தி ஆக உதவுவதோடு, நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும் உதவும். ▶மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாய்வு உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். ▶குறிப்பாக, தொப்பையை குறைக்க உதவும் என டாக்டர் கூறுகின்றனர்,

News March 15, 2026

விஜய்யிடம் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தையா?

image

விஜய்யிடம் பாஜக மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதுதொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, பத்திரிகையாளர்களுக்கு தெரிந்த தகவல் கூட தனக்கு தெரியாது என கூறினார். மேலும், விஜய்யின் டெல்லி பயணத்தையும் கூட்டணியையும் முடிச்சுப் போடுவது எந்த வகையிலும் நியாயமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 15, 2026

ஒரே நாளில் 88 லட்சம் கேஸ் சிலிண்டர் புக்கிங்!

image

எங்கு நமக்கு சிலிண்டர் கிடைக்காமல் போகிவிடுமோ என்ற அச்சத்தில் பலரும் முண்டியடித்து புக்கிங் செய்து வருகின்றனர். கேஸ் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தாலும் மக்களின் அச்சம் குறையவில்லை. நேற்று முன்தினம் மட்டும் 88 லட்சம் கேஸ் சிலிண்டர்கள் புக் செய்யப்பட்டதாக பெட்ரோலிய துறை தெரிவித்துள்ளது. இதனால் தேவையின்றி கேஸ் புக்கிங் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!