News February 18, 2025

போக்சோ வழக்கில் தண்டனை பெற்றால் சான்றிதழ் ரத்து

image

போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும் என TN CS முருகானந்தம் அறிவித்துள்ளார். மேலும் இனிமேல் ஆசிரியர்கள் நியமனத்தின்போது, போலீஸ் வெரிஃபிகேஷன் சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சமீப நாட்களாக TN பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகரித்துள்ள சூழலில், அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Similar News

News December 5, 2025

அது நில அளவைக் கல், தீபத்தூண் அல்ல: கனிமொழி

image

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற பாஜகவினர் முயற்சிக்கின்றனர் என கனிமொழி சாடியுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீபமேற்ற சொல்கிறார்கள் என குறிப்பிட்ட அவர், மதநல்லிணக்க சூழலை சீர்கெடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்ட படியே வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது என தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

சென்னையில் நாளை (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று பிற மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாகலாம்.

News December 5, 2025

அதானி குழுமத்திற்கு ₹48,000 கோடி கொடுத்த LIC

image

அதானி குழுமத்தின் கடன்களை தீர்க்க LIC பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இதுகுறித்து பார்லி.,யில் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி குழுமத்தில் LIC ₹48,284.62 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த முதலீட்டை செய்ய சொல்லி அரசு உத்தரவிடவில்லை எனவும், LIC தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!