News April 13, 2025

அமெரிக்காவில் ஹிந்துக்களை அவமதித்தால் தண்டனை

image

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் ஹிந்து மதம் குறித்து அவதூறு பரப்புபவர்களை தண்டிக்க புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் செனட் சபையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்துள்ளனர். இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டதும் அமலுக்கு வரும். அமெரிக்காவில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக ஒரு மசோதா தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை.

Similar News

News January 18, 2026

நாகை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘572’ அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10=ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.24,250 – ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு கிளிக்<<>> செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News January 18, 2026

தமிழ் திரைப்பட எடிட்டர் காலமானார்

image

‘டிஷ்யூம்’, ‘ரோஜாக்கூட்டம்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய பீட்டர் பாபியா (58) காலமானார். நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்றுவந்த பாபியா, அவரது சொந்த ஊரான சேலம் அஸ்தம்பட்டியில் பஸ்ஸில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர், ஹாஸ்பிடல் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். பாபியாவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 18, 2026

விவசாயிகளுக்கான மதிப்பு குறைந்து வருகிறது: கார்த்தி

image

விவசாயிகளை இச்சமூகம் பெரிதாக அங்கீகரிப்பதில்லை என கார்த்தி கவலை தெரிவித்துள்ளார். உழவன் விருதுகள் விழாவில் பேசிய அவர், விவசாயிகளுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தாலும், அவர்களுடைய உழைப்பு ஒருபோதும் நின்றுவிடவில்லை என கூறியுள்ளார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோரை சமூகம் கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!