News March 17, 2024
புதுக்கோட்டை: எம்எல்ஏ அலுவலகங்களுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியிருப்பது, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார். மேலும் புதுக்கோட்டையிலுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை தேர்தல் அலுவலர்கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். அதைபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களும் மூடப்பட்டன.
Similar News
News December 2, 2025
புதுக்கோட்டை: 10th போதும் அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News December 2, 2025
புதுக்கோட்டை: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

புதுகை மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 2, 2025
புதுகை: பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது

அறந்தாங்கியில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் (பொ) மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் 2 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து புரோக்கர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


