News March 17, 2024

புதுகை: வீடுகளை தேடி பாஜகவினர் பிரச்சாரம்

image

புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் பயனடைந்த பொதுமக்களின் பட்டியலுடன் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஏவிசிசி. கணேசன் பிரச்சாரத்தை துவங்கி வைத்தார், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் ஆகிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Similar News

News January 4, 2026

புதுகை: 12th தகுதி.. ரயில்வே வேலை ரெடி!

image

புதுகை மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தது 18 வயது நிரம்பிய, 12வது படித்தவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து, வரும் ஜன.29-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 4, 2026

புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில், இன்றே (ஜன.04) கடைசி நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1681 ஓட்டு சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் விடுபட்ட வாக்காளர்கள், SIR படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனவும் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

News January 4, 2026

புதுகை: முக்கிய தகவல் வெளியிட்ட கலெக்டர்!

image

புதுகை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் இதுவரை 28 முகாம்கள் நடந்துள்ளன. சராசரியாக ஒரு முகாமிற்கு 1400 பேர் பயனடைந்துள்ளனர். இம் முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீர் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 17 சிறப்பு சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 40,888 பயன் அடைந்ததாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!