News March 21, 2024

தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை – அண்ணாமலை, நீலகிரி – எல்.முருகன், தென் சென்னை – தமிழிசை செளந்தரராஜன், நெல்லை – நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி – நரசிம்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல பெரம்பலூர் – பாரிவேந்தர், வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகின்றனர்.

Similar News

News September 9, 2025

BREAKING: நேபாள ஜனாதிபதி ராஜினாமா

image

நேபாளத்தில் இளைஞர்களின் புரட்சியால் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்த நிலையில், இன்று பிரதமர் சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பிச் சென்றார். இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைக்கு ஆட்சியை ராணுவம் கையிலெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 9, 2025

நேபாள் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

image

நேபாளத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977 – 9808602881, 9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

News September 9, 2025

தமிழ் நடிகைக்கு திருமணம் முடிந்தது ❤️PHOTO❤️

image

ராமின் ‘பறந்து போ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி. தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ளது. கணவருடன் கைகோர்த்தபடி இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், ‘No Sounds, No lights, No Crowd. #justmarried’ என குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், கணவர் முகத்தை அவர் காட்டவில்லை. கிரேஸ் ஆண்டனிக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!