News November 30, 2024
பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: உதயநிதி

புயல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என துணை முதல்வர் உதயநிதி கேட்டுக்கொண்டுள்ளார். பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதால் புயலால் ஏற்படும் பாதிப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது என்றார். தாழ்வானப் பகுதிகளில் தேங்கும் மழை நீர் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டு வருவதால், விரைவில் இயல்பு நிலை திரும்பும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News April 28, 2025
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை ரத்து

அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 2026 -2010 வரை வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.2.1 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஐ.பி.,யை திண்டுக்கல் நீதிமன்றம் விடுத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அவரின் விடுதலையை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இது அவருக்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
News April 28, 2025
விஜய் சங்கரின் மாஸ் ரெக்கார்டை உடைத்த கோலி!

நடப்பு ஆண்டில் விஜய் சங்கரின் ஒரே சாதனை DC-க்கு எதிராக 43 பந்துகளில் அரைசதம் அடித்தது தான். இதுதான் IPL 2025-ல் மிகவும் மெதுவான அரைசதமாக இருந்தது. மோசமான ரெக்கார்ட் என்றாலும், அவரால் இந்த சீசனில் ஒரே ஆறுதல் ரசிகர்களுக்கு இதுமட்டுமே. ஆனாலும், அதுவும் இருக்கக்கூடாது என கோலி முடிச்சி விட்டார். DC-க்கு எதிரான மேட்சில் அவர் 45 பந்துகளில் அரைசதம் அடித்து விஜய் சங்கரின் ரெக்கார்டை உடைத்து விட்டார்.
News April 28, 2025
போர் பதற்றம்… கூடும் நாடாளுமன்ற நிலைக்குழு

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே <<16241905>>பதற்றம் <<>>நீடித்து வருகிறது. இதனிடையே பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று மாலை கூடுகிறது. இதில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.