News March 17, 2024
திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியில் இன்று(மார்ச்.17) காலை அய்யனூர் கிராமத்திற்கு சொந்தமான சுடுகாட்டை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் மண் குவியலை கொட்டி பாதையை ஆக்கிரமித்ததாக கூறி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
FACT CHECK: திருப்பத்தூரில் வெள்ளை காகம்?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னாம் பேட்டை பகுதி, பங்களா தோப்பு மற்றும் சுற்றியுள்ள மரங்களில் வெள்ளை காகம் ஒன்று வந்து செல்வதாக சமூக வலைதளலங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் அது முற்றிலும் பொய், அந்த வீடியோ மார்ச்-2022ஆம் ஆண்டு சில செய்தியில் வெளி வந்துள்ளது. அதனை தற்போது வைரலாக்கி வருகின்றனர். ஷேர் பண்ணுங்க.
News January 31, 2026
திருப்பத்தூர்: கல்லூரி பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்து

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் கல்லூரி பேருந்து நேற்று (ஜன.30) கல்லூரி முடித்துவிட்டு, மாணவர்களை ஏற்றிக்கொண்டு, வாணியம்பாடி நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது சின்னமோட்டூர் அருகே முன்னால் பேனர் கம்பிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது திடீரென கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
News January 31, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஜனவரி 31 இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


