News December 28, 2024

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை (2/2)

image

மே 1 – மே தினம், ஜூன் 7 – பக்ரீத், ஜூலை 6 – முஹர்ரம், அகஸ்ட் 15 – சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 – கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 27 – விநாயகர் சதுர்த்தி, செப் 5 – மிலாதுன் நபி, அக் 1 – ஆயுத பூஜை, அக் 2 – விஜயதசமி, அக் 20 – தீபாவளி, டிச 25 – கிறிஸ்துமஸ் ஆகிய நாள்களில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 24, 2025

₹10 லட்சத்திற்கு அதிகமான பொருள் வாங்கினால் 1% வரி

image

₹10 லட்சத்திற்கு மேல் விலையுடைய ஆடம்பர பொருள் வாங்கும்போது இனி 1% டிசிஎஸ் (Tax collected at source) வரி விதிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆடம்பர கைப்பை, கைக் கடிகாரங்கள், காலணிகள், ஓவியங்கள் உள்ளிட்டவை வாங்கினால் கூடுதலாக வரி விதிக்கப்படும். இது ஏப்.22 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதற்கு முன்பு வாங்கிய பொருள்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2025

முப்படைகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு

image

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், பதிலடி தாக்குதல் தொடர்பாக இன்று(ஏப். 24) மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதேநேரத்தில், முப்படைகளும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.

News April 24, 2025

1,170 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

முகூர்த்தம், வார இறுதி நாள்களை முன்னிட்டு, 1,170 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 370, நாளை மறுநாள் 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாளையும், நாளை மறுநாளும் தலா 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோல், மாதவரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 290 பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

error: Content is protected !!