News March 16, 2024
தமிழகத்தில் பொது விடுமுறை

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று பொது விடுமுறை அளிக்கப்படும். தமிழகத்தில் ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறையை கணக்கிட்டு முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.
Similar News
News January 26, 2026
ரேஸிங்கிற்கு பிரேக்: பைக் ரைடுக்கு கிளம்பிய AK!

கார், பைக் என இரண்டிலும் தீவிரம் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் அஜித். சினிமாவிற்கு சின்ன கேப் விட்டு, கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் அவர், மீண்டும் பைக் ரைடுக்கு புறப்பட்டு விட்டார். தற்போது துபாயில் உள்ள அவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் & ஓமன் வழியாக பைக் ரைட் ஒன்றுக்கு கிளம்பியுள்ளார். ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஐரோப்பாவில் அஜித் பைக் ரைட் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 26, 2026
மலேசியாவில் 500 தமிழ்ப் பள்ளிகள்: PM மோடி

நமது இந்தியச் சமூகம் மலேசியாவிலும் கலாசாரம், பண்பாட்டை போற்றுகின்றனர் என PM மோடி கூறியுள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் உள்ளதாகவும், அவற்றில் தமிழ் பாடத்துடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், பிற பிராந்திய மொழிகளுக்கும் அங்கு முக்கியத்துவம் தரப்படுவதாக குறிப்பிட்டார்.
News January 26, 2026
அரசியலமைப்பின் மாண்பை காப்போம்: EPS, விஜய் வாழ்த்து

நாட்டின் 77-வது குடியரசு தினத்தையொட்டி EPS, விஜய் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நமது இந்திய மக்களாட்சி தொடர்ந்து வலுப்பெறும் வகையில் செயல்பட இன்று உறுதியேற்போம் என EPS குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம் என விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


