News April 11, 2025

நெல்லை, தென்காசிக்கு இன்று (ஏப்.11) பொது விடுமுறை

image

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கும், காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் இன்று (ஏப்.11) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இரு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேவேளையில் இன்று நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு (அறிவியல்) எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும். PLEASE SHARE IT.

Similar News

News April 18, 2025

இப்பிரச்னை இருக்கா.. தேங்காய் தண்ணீரை குடிக்காதீங்க!

image

சம்மரில் உடல் சூட்டை தணிக்க, தேங்காய் தண்ணீர் பருகுவோம். ஆனால், உயர் ரத்த சர்க்கரை அளவு பிரச்னை இருப்பவர்கள், அடிக்கடி தேங்காய் நீரை குடிப்பதால், அது உடல்நல பிரச்னைக்கு வழிவகுக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, பழுப்பு நிற தேங்காயில் 6-8 கிராம் வரை சர்க்கரை இருப்பதால், அது ரத்த சர்க்கரை அளவை கூட்டிவிடும். அதே நேரத்தில், இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என்பதால், அதனால் பெரிய பாதிப்புகள் இல்லை.

News April 18, 2025

பிரபல எழுத்தாளர் மறைவு

image

இந்திய மலைகள், நதிகள் குறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ள பிரபல எழுத்தாளர் பில் எய்ட்கான் (90) காலமானார். ஸ்காட்லாந்தில் பிறந்த அவர், அமெரிக்காவில் பிறகு குடியேறினார். வீட்டில் தடுக்கி விழுந்து காயமடைந்த நிலையில், டேராடூன் ஹாஸ்பிடலில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் கடைசி ஆசைப்படி, ஹரித்வாரில் கங்கை நதிக்கரை அருகே நேற்று உடல் தகனம் செய்யப்பட்டது.

News April 18, 2025

இந்தியாவில் டெஸ்லா கார் எப்போது வருகிறது?

image

PM மோடி, எலான் மஸ்க்குடன் ஃபோனில் பேசியுள்ளார். இதற்கு முன், அமெரிக்காவில் நடந்த சந்திப்பின்போது விவாதித்த விவகாரங்கள் மற்றும் தற்போதைய இறக்குமதி வரிவிதிப்பு குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர். இதனால், இந்திய சந்தைக்குள் டெஸ்லா கார்கள் விரைவில் நுழையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்டின் 3வது காலாண்டுக்குள் மும்பை, டெல்லி, பெங்களூருவில் விற்பனை தொடங்கக்கூடும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!