News May 6, 2024
தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை

+2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க, மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு சுகாதாரத் துறை மூலம் 100 மனநல ஆலோசகர்கள் மனநலம் சார்ந்த ஆலோசனை வழங்கவுள்ளனர். சுழற்சிக்கு 30 ஆலோசகர்கள் வீதம், 3 சுழற்சியில் செயல்படுவர். மனநல ஆலோசனைகளுக்கு ‘104’ மற்றும் ‘14416’ ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 24, 2025
CM ஸ்டாலினுடன் சுதர்சன் ரெட்டி சந்திப்பு

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னையில் CM ஸ்டாலினை சந்தித்தார். அப்போது திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார். நிகழ்வில் பேசிய சுதர்சன் ரெட்டி, பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் CM ஸ்டாலின் தமிழகத்தை சிறப்பாக வழிநடத்துவதாகவும் கல்வி, சுகாதார கட்டமைப்பில் நாட்டை வழிநடத்தும் அளவிற்கு தமிழகம் உயர்ந்திருப்பதாகவும் புகழ்ந்தார்.
News August 24, 2025
SPACE: சூரியன் வெடிச்சிட்டா என்ன ஆகும் தெரியுமா?

திடீர்னு ஒருநாள் சூரியன் வெடிச்சிட்டா என்ன ஆகும்னு யோசிச்சிருக்கீங்களா? அப்படி நடந்தா அது பெரிய அழிவுகளுக்கு வழிவகுக்கும்னு வல்லுநர்கள் சொல்றாங்க ▶சூரியன் வெடிச்சதும் வெளியாகும் neutrino கதிர்வீச்சு உயிரினங்களை அழிச்சிடுமாம் ▶சூரியனோட Gravity இல்லாம, பூமி உள்பட எல்லா கோள்களும் தூக்கி வீசப்படும் ▶பூமியோட temperature -73°C வரை குறைந்து கடல்கள் உறையும்னு வல்லுநர்கள் சொல்றாங்க. SHARE.
News August 24, 2025
விஜய் விவகாரத்தில் எல்லை மீறும் திமுக MLA-க்கள்!

CM ஸ்டாலினை ‘அங்கிள்’ என்ற விஜய்க்கு திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூரியனை பார்த்து நாய் குரைக்கும், அதற்காக நாய் மீது சூரியன் கோபப்படுவதில்லை என ஈரோடு கிழக்கு MLA சந்திரகுமார் சர்ச்சையாக பேசியுள்ளார். அதேபோல், அப்பா, அம்மா, மனைவியை பார்த்து கொள்ள முடியாதவர், மக்களை எப்படி பார்த்து கொள்வார் என MLA KP சங்கர், விஜய் குடும்பம் குறித்து பேசியுள்ளார். உங்கள் கருத்து என்ன?