News December 4, 2024
சூரிய வெளியை ஆய்வு செய்ய விண்ணில் பாயும் PSLV C-59!

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்களுடன் (Proba-3) PSLV C-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட இருக்கும் இந்த Proba-3ஐ ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மாலை 3.08 மணிக்கு தொடங்கியது. தற்போது எரிபொருள் நிரப்புதல் உள்பட இறுதிப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Similar News
News December 28, 2025
முதல்வரை விஜய் நையாண்டி செய்வது தவறு: வேல்முருகன்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனும் ஓடும் என கூறும் விஜய், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய் திறக்காதது ஏன் என தவாக தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். கேலி செய்யும் நோக்கில் முதல்வரை சார், அங்கிள் என அழைப்பது சரியல்ல எனவும் சாடியுள்ளார். மேலும் CM-ஐ விமர்சிக்கும் விஜய், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தும் மதவாத கும்பல்களை கண்டிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 28, 2025
நண்பர் அஜித் என குறிப்பிட்டு பேசிய விஜய்..!

சினிமாவில் நேரெதிர் துருவமாக இருந்தாலும், அஜித் – விஜய் இடையே நல்ல நட்பு உள்ளது. ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் ‘நண்பர் அஜித்’ என விஜய் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். நண்பர் அஜித் நடித்த பில்லா மற்றும் காவலன், குருவி என பல படங்களின் ஷூட்டிங் இங்கு நடைபெற்றிருக்கிறது என அவர் தெரிவித்தார். ‘மாஸ்டர்’ பட நிகழ்ச்சியிலும், நண்பர் அஜித் போல் கோட் அணிந்திருப்பதாக விஜய் பேசியது குறிப்பிடத்தக்கது.
News December 28, 2025
ராசி பலன்கள் (28.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


