News March 17, 2024
பிஆர்எஸ் கவிதாவுக்கு மார்ச் 23 வரை காவல்

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பி.ஆர்.எஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவின் காவல் மார்ச் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவரை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ED கோரிக்கையை ஏற்று, மார்ச் 23 வரை கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதியளித்தது.
Similar News
News August 17, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪₹5 லட்சம் வரை <<17431659>>பயிர்க்கடன்<<>>.. தொடங்கி வைத்த CM ஸ்டாலின்
✪ஊழலில் <<17431901>>திமுகவுக்கு <<>>தேசிய விருது: EPS விமர்சனம்
✪ED-யிடம் சிக்கிய <<17432197>>ஆவணங்கள்<<>>.. அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு நெருக்கடி
✪கொட்டித்தீர்க்கும் கனமழை.. <<17431829>>இமாச்சலில் <<>>136 பேர் உயிரிழப்பு
✪Saipan <<17431425>>பேட்மிண்டன் <<>>தொடர்.. சாம்பியன் பட்டம் வென்ற தான்யா ஹேமந்த் ✪வசூல் மழையில் ‘<<17432528>>கூலி<<>>’.. 3 நாளில் ₹300 கோடி வசூல்.
News August 17, 2025
‘அய்யா முடிவே இறுதியானது’ தொண்டர்கள் பதாகை

ராமதாஸ் தலைமையிலான பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அவரது மூத்த மகள் காந்திமதி, ராமதாஸ் அருகிலேயே அமர்ந்துள்ளார். முன்பு அன்புமணி இருந்த இடத்தில் தற்போது காந்திமதி அமர்ந்துள்ளார். இதனால் அவருக்கு உயர்பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை; அய்யா முடிவே இறுதியானது’ என்ற பதாகைகளை தொண்டர்கள் ஏந்தியுள்ளனர்.
News August 17, 2025
‘ஆசிய கோப்பைக்கு இதுதான் பெஸ்ட் இந்திய டீம்’

ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை, Ex இந்திய வீரர் முகமது கைஃப் தேர்வு செய்துள்ளார். கைஃபின் அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), அக்சர் படேல்(துணை கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சுப்மன் கில், ஜிதேஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, முகமது சிராஜ். இந்த டீம் எப்படி இருக்கு?