News March 19, 2025

பக்தர் குடும்பத்திற்கு ₹10 லட்சம் வழங்குக: அண்ணாமலை

image

திருச்செந்தூர் கோயிலில் உயிரிழந்த பக்தர் ஓம் குமாரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் வழங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். மேலும் கோயில்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, தமிழக அரசு முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். திருச்செந்தூர் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற ஓம் குமார், கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானார்.

Similar News

News March 19, 2025

4 நாள்கள் தொடர் விடுமுறை!

image

இம்மாத இறுதியில் 4 நாள்கள் தொடர் விடுமுறை வரவுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 31 ரம்ஜான் பண்டிகை (திங்கட்கிழமை), ஏப்ரல் 1 வங்கிக் கணக்கு முடிவு நாள் அரசு பொது விடுமுறை நாளாகும். இதனால், இப்போதே சோஷியல் மீடியாவில் இது குறித்த மீம்ஸ்கள் டிரெண்டாகத் தொடங்கியுள்ளன. இந்த விடுமுறையில் உங்க பிளான் என்ன?

News March 19, 2025

புடினுக்கு போன் போட்ட டிரம்ப்.. உக்ரைன் போர் நிறுத்தம்?

image

உக்ரைன் உடனான போரை நிறுத்துவது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன், USA அதிபர் டிரம்ப் 2 மணி நேரம் போனில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உக்ரைனின் உள்கட்டமைப்புகள், ஆற்றல் மையங்களில் தாக்குதல் நடத்துவதை 30 நாள்கள் நிறுத்தி வைக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், முழுநேர போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

News March 19, 2025

KKR vs LSG போட்டி மாற்றம்.. ஏன் தெரியுமா?

image

கொல்கத்தாவில் வரும் ஏப்.6ஆம் தேதி நடைபெற இருந்த KKR vs LSG ஐபிஎல் லீக் போட்டி மாற்றப்பட உள்ளது. அன்று ராமநவமி என்பதால், பாஜக சார்பில் 20,000 ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, போலீசாரால் போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறியதால், போட்டி மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், இது குறித்து BCCIயிடம் தெரிவித்துவிட்டதாகவும் பெங்கால் கிரிக்கெட் அசோசியன் தலைவர் சிநேகாஷிஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!