News October 31, 2025
முக்குலத்தோருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குக: GK மணி

தென்தமிழகத்தை மையமாக கொண்டு வாழக்கூடிய முக்குலத்தோர் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் உள்ள GK மணி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் தனித்தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், வன்னியருக்கு 15% ஒதுக்கீட்டை பாமக தலைவர் அன்புமணி கோரி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 31, 2025
நயினாருடன் அதிமுகவினர் ஆலோசனை

நெல்லை BJP ஆபீஸில் நயினாருடன் அதிமுக ex அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். பசும்பொன்னில் OPS, TTV, செங்கோட்டையன் ஆகிய மூவரும் இணைந்து பேட்டியளித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், அந்த மூவர் சந்திப்பால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை; ஒருநாள் பரபரப்புக்காக 3 பேரும் சந்தித்துள்ளனர் என்று விமர்சித்தார்.
News October 31, 2025
BREAKING: மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச laptop வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மார்ச்சுக்குள் இலவச லேப்டாப்கள் விநியோகம் செய்யப்படும் என TN அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்களை வழங்க HP, Dell, Acer ஆகிய நிறுவனங்களுக்கு தமிழக அரசு கொள்முதல் ஆணை வழங்கியுள்ளது. laptop விநியோக திட்டத்தை தொடங்குவது குறித்து DCM உதயநிதி தலைமையிலான குழு முடிவெடுக்கும்.
News October 31, 2025
இன்னொரு ராட்சசனா இந்த ஆர்யன்? முழு Review

டிவி ஷோவில், தான் கொல்ல திட்டமிட்டுள்ளவர்களின் லிஸ்ட்டை கொடுக்கும் சைக்கோ வில்லனிடம் இருந்து, அவர்களை விஷ்ணு விஷால் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ‘ஆர்யன்’ ✱பிளஸ்: முதல் 20 mins அட்டகாசம். விஷ்ணு விஷால், செல்வராகவன் தேர்ந்த நடிப்பால் மிரட்டுகின்றனர். ஜிப்ரானின் BGM அசத்தல் ✱பல்ப்ஸ்: 2-ம் பாதி ஸ்லோ. ஹீரோ பிளாஷ்பேக் ஒட்டவில்லை. இன்னொரு ராட்சசன் இல்லை என்றாலும், ஆர்யன் ஓரளவு ரசிக்க வைக்கிறான்.


