News December 17, 2024

மழை பாதித்த விவசாயிகளுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்குக

image

மழை பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணம் அளிக்க வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் அண்மையில் புயல் காரணமாகவும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் பெய்த மழையால் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை அறிவித்து, கணக்கெடுப்பை மேற்கொள்கிறது.

Similar News

News September 16, 2025

BREAKING: சனிக்கிழமை பிளானை மாற்றினார் விஜய்

image

<<17725321>>தேர்தல் பரப்புரைக்காக<<>> ஒவ்வொரு சனிக்கிழமையும் 3 மாவட்ட மக்களை விஜய் சந்திப்பதற்கு பிளான் போடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சனிக்கிழமை 2 மாவட்டங்களில் மட்டுமே விஜய்யால் பரப்புரை மேற்கொள்ள முடிந்தது. இதனையடுத்து, ஒவ்வொரு பரப்புரை நாளன்றும் 2 மாவட்டங்களுக்கு மட்டுமே செல்லும் வகையில் விஜய் தனது பிளானை மாற்றியுள்ளார். அவரது புதிய பரப்புரை அட்டவணை விரைவில் வெளியாகும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News September 16, 2025

இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது: ஐநா

image

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பசி, பட்டினியால் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் என பலர் உயிரிழக்கும் அவலம் காசாவில் தொடர்கிறது. இந்நிலையில், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல், இனப்படுகொலையை செய்வதாக ஐநாவின் விசாரணை ஆணையம் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. என்று தணியுமோ?

News September 16, 2025

Sports Roundup: இன்று தமிழ் தலைவாஸ் Vs பெங்களூரு புல்ஸ்

image

* ஸ்விஸ் மகளிர் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு PM மோடி வாழ்த்து. * சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி. * ஆசிய கோப்பையில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராப்ட்-ஐ நீக்க வேண்டும் என்ற பாக். கோரிக்கை நிராகரிப்பு. *டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 3,000 ரன்கள் அடித்து UAE வீரர் முகமது வஸீம் சாதனை. * புரோ கபடியில் இன்று தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதல்.

error: Content is protected !!