News October 26, 2025

இளைஞர்களுக்கு பரிசு தொகை வழங்குக: EPS

image

ஆசிய கபடி போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூர் அபினேஷ் மோகன் தாஸுக்கு EPS வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்கள் சிறப்பான ஆட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்துள்ளது மெச்சத்தக்கது என்றும் பாராட்டியுள்ளார். மேலும், சர்வதேச அரங்கில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இளைஞர்களுக்கு உரிய பரிசுத் தொகை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News October 26, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 26, ஐப்பசி 8 ▶கிழமை:ஞாயிறு ▶நல்ல நேரம்:7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM
▶எமகண்டம்:12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை

News October 26, 2025

ஃபேஷன் ப்ரீக்காக மாறிய ராஷ்மிகா

image

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய நடிகைகளில் அதிக இன்ஸ்டா பாலோயர்ஸ் கொண்ட நடிகையாக உள்ளார். நேஷ்னல் க்ரஸ் ராஷ்மிகா, தற்போது ஃபேஷன் ஃப்ரீக்காக மாறியுள்ளார். அவரது ஃபேஷன் போட்டோஸுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News October 26, 2025

திமுகவிடம் 25 சீட் கேட்போம்: விசிகவின் சங்கத்தமிழன்

image

விசிக இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என அக்கட்சி நிர்வாகி சங்கத்தமிழன் தெரிவித்துள்ளார். எங்களுக்கு இருக்கும் டிமாண்டை வைத்து 25 சீட்டுகள் வரை கூட கேட்போம். நாங்கள் தான் கேம்சேஞ்சர். எங்கள் கூட்டணிக்காக EPS கூட காத்திருந்தார். நாங்கள் வராததால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். விசிகவின் முக்கியத்துவம் திமுக தலைமைக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!