News October 28, 2025
தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் எதிர்ப்பு

2-ம் கட்டமாக SIR நடத்த போவதாக ECI நேற்று அறிவித்தது. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால் என கேரள CM பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டை(NRC) மறைமுகமாக திணிக்கும் முயற்சி எனவும், மத்தியில் ஆளும் கட்சியின் கைப்பாவையாக ECI செயல்பட கூடாது என்றும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, ECI-ன் அறிவிப்பை திமுக கூட்டணி கட்சிகளும் சாடியிருந்தது.
Similar News
News October 28, 2025
புயல் அலர்ட்.. நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

மொன்தா புயலையொட்டி புதுச்சேரி ஏனாமில் நாளை(அக்.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மழை பாதிப்பால் சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதும் மழை நீடிப்பதால் நாளை விடுமுறை அளிக்க மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகங்கள் விரைவில் அறிவிக்க உள்ளன.
News October 28, 2025
புது Dress வாங்குன உடனேயே இந்த தவறை பண்ணாதீங்க!

புதிய ஆடைகளை வாங்கிய உடன் அணிந்தால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் வாங்கிய ஆடையை வேறொருவர் ட்ரையல் பார்த்திருக்கலாம். அவர்களின் வியர்வை ஆடையில் பட்டிருக்கும். இதை அப்படியே நாம் ஒருநாள் முழுவதும் அணிந்திருந்தால் Rashes, allergy போன்ற சருமப் பிரச்னைகள் வரலாம். இதனால் புதிய ஆடைகளை துவைத்து, வெயிலில் காயப்போட்ட பின்பு அணிவது நல்லது. விழிப்புணர்வுக்காக SHARE.
News October 28, 2025
BREAKING: தவெகவில் புதிய குழு அமைத்தார் விஜய்

கரூர் துயரினால் முடங்கியிருந்த விஜய், தற்போது கட்சிப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தவெக அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை அவர் நியமித்துள்ளார். N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 28 பேர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவிற்கு தவெக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.


