News April 4, 2025
தமிழகம் முழுவதும் தவெக இன்று ஆர்ப்பாட்டம்

வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக TVK சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். ஆட்சி அதிகாரம் இருந்தால், எந்தவொரு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற மனநிலை கொண்ட ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த கதி வரலாற்றில் உள்ளதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கையில் எடுத்துள்ளதாக பாஜக அரசையும் அவர் கண்டித்துள்ளார்.
Similar News
News March 15, 2026
நெருங்கும் தேர்தல்.. அதிமுகவில் புதிய மாற்றம்

தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக ஆட்சி மன்றக் குழுவை மாற்றி அமைத்து EPS அறிவிப்பு வெளியிட்டுள்ளார். EPS தலைமையிலான ஆட்சி மன்றக் குழுவில் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், SP வேலுமணி, வளர்மதி, வேணுகோபால் Ex MP, ஜஸ்டின் செல்வராஜ், இன்பதுரை MP ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அதிமுகவினர் செயல்பட வேண்டும் என EPS கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 15, 2026
வங்கி கணக்கில் மேலும் ₹3,000.. ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை ₹12,000-ல் இருந்து ₹15,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக அரசாணை வெளியாகியுள்ளது. அதில், பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கான ஓய்வூதியமும் ₹6,000-ல் இருந்து ₹7,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வீட்டு வசதி வாரியத்தில் அவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT
News March 15, 2026
தேர்தல் அறிவிப்பு.. ரயில் டிக்கெட்கள் காலி

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. இதையடுத்து, வாக்களிப்பதற்கு சொந்த ஊர் செல்வதற்காக பலரும் IRCTC-ல் டிக்கெட் புக் செய்து வருகின்றனர். குறிப்பாக ஏப்.21, ஏப்.22 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்கான டிக்கெட்கள் கடகடவென காலியாகி வருகின்றன. டிக்கெட் புக் செய்யாதவர்களே முந்துங்க..


