News July 5, 2024
அதிமுக சார்பில் இன்று போராட்டம்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். புதிய சட்டத்தின் மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதை கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த 2 விஷயங்களையும் கண்டித்து அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் போராட்டம் நடைபெறும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
ஆதாரில் போன் நம்பரை இனி வீட்டிலேயே ஈசியா மாற்றலாம்!

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள போன் நம்பரை மாற்ற, இனி பெரிய க்யூவில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதில் வீட்டில் இருந்த படியே மாற்றலாம் என UIDAI அறிவித்துள்ளது. போனில் ‘ஆதார் APP’-ஐ டவுன்லோட் செய்து, அதில் OTP மற்றும் Face Authentication மூலம் போன் ஆதார் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ள நம்பரை மாற்றலாம். அந்த ஆப்பை டவுன்லோட் செய்ய, <
News November 28, 2025
FLASH: டிச.4-ல் இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்

2 நாள்கள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் வரும் 4-ம் தேதி இந்தியா வருகிறார். 4-ம் தேதி அன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு, PM மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளார். மறுநாள் 23-வது இந்தியா – ரஷ்யா ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக பிரச்னை நீடிக்கும் நிலையில், ரஷ்யா உடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு புடின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
News November 28, 2025
வெனிஸ் அழகை ரசித்த அஜித் பேமிலி (PHOTOS)

அண்மையில் இத்தாலியில் ஜென்டில்மேன் டிரைவர் விருதை, அஜித்துக்கு வழங்கி பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் கௌரவித்திருந்தது. இந்த விருதை பெற அஜித் தனது குடும்பத்துடன் வெனிஸ் சென்ற நிலையில், அந்த போட்டோஸை இப்போது ஷாலினி பகிர்ந்துள்ளார். வெனிஸ் நகரின் அழகியலோடு எடுக்கப்பட்டுள்ள அஜித் பேமிலி போட்டோஸ் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. மேலே உள்ள அந்த போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.


