News May 1, 2024
கல்குவாரியை மூடக்கோரி போராட்டம்

விருதுநகர் காரியப்பட்டி அருகே வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு 5 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல முறை கோரிக்கை விடுத்தும் கல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் சிக்கியதாக கூறப்படுவதால் மீட்புப்பணிகள் தீவிரமடைந்துள்ளன.
Similar News
News February 21, 2026
Love Marriage-க்கு இப்படி ஒரு Rule-ஆ.. ஐயோ…!

வீட்டாருக்கு தெரிந்தால் மட்டுமே ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யமுடியும் என ரூல்ஸ் வந்தால் எப்படி இருக்கும்? வந்திருக்கு. காதலர்கள் பதிவுத் திருமணத்துக்கு விண்ணப்பிக்கும்போது, அதுகுறித்த தகவல் பெற்றோருக்கு WhatsApp மூலம் உடனடியாக அனுப்பப்படும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இந்த விதியால் காதலர்கள் திருமணம் செய்வதில் பல சிக்கல்கள் ஏற்படலாம் என பலர் விமர்சிக்கின்றனர். உங்கள் கருத்து?
News February 21, 2026
ஜனாதிபதி முர்முவை சந்தித்த ஐநா முக்கிய தலைவர்!

ஜனாதிபதி திரெளபதி முர்முவை, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்து பேசினார். டெல்லியில், நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் சூழலில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என முர்மு கேட்டுக் கொண்டார். மேலும், இது தொடர்பாக ஐநா எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
News February 21, 2026
காங்கிரஸார் காலில் விழுந்தனர்: திமுக MP

2021 தேர்தலில் புதுச்சேரியில் உதய சூரியனை தனித்தே விட்டிருந்தால் 30 தொகுதிகளிலும் உதித்திருக்கும் என்று ஜெகத்ரட்சகன் MP தெரிவித்துள்ளார். ஆனால், புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்வதற்குள்ளாகவே தொகுதிகளுக்காக காங்., கட்சியினர் கை, காலில் விழுந்து அழுததால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக – காங்., கூட்டணி சலசலப்பில் MP-யின் இக்கருத்து புதிய புயலை கிளப்பியுள்ளது.


